மேலும் ஒருவர் சாவு

மோட்டார்சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.;

Update: 2022-11-09 18:45 GMT

திருப்புவனம்

திருப்புவனம் கீழரத வீதியை சேர்ந்தவர் சத்தியேந்திரன் (வயது 26). மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக மேற்கு வங்காளத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்தவர் சம்பவத்தன்று மோட்டார்சைக்கிளில் அதேபகுதியை சேர்ந்த டீ மாஸ்டராக வேலை பார்த்த விக்னேஷ்(25) என்பவருடன் மதுரைக்கு சென்றார். சக்குடி விலக்கு அருகே ெசன்றபோது மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சத்தியேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். விக்னேஷ் பலத்த காயத்துடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் இறந்தார். இதுகுறித்து திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்