கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்து: 2 தனியார் பால் வண்டிகள் கவிழ்ந்தன

கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 தனியார் பால் வண்டிகள் கவிழ்ந்தன.

Update: 2022-09-15 23:00 GMT

கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்து: 2 தனியார் பால் வண்டிகள் கவிழ்ந்தனசேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் உள்ள சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை குஜராத்தில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது. சர்வீஸ் சாலையில் சென்ற அந்த லாரி, பாலத்தின் மேல் பகுதியில் ஏறியது. அப்போது அந்த லாரியின் ஒரு டயர் திடீரென பஞ்சரானது. இதனால் நடு வழியில் லாரியை அதன் டிரைவர் நிறுத்தினார். அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பால் வண்டி, எதிர்பாராதவிதமாக கன்டெய்னர் லாரியின் மீது மோதி கவிழ்ந்தது. பால் வண்டியின் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பித்தார். அதேநேரத்தில் பின்னால் வந்த மற்றொரு தனியார் பால் வண்டியும் விபத்தில் சிக்கி சாலையில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. அடுத்தடுத்து வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்தில் சிக்கிய 2 பால் வண்டிகளும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்