டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

Update: 2022-08-21 18:37 GMT

உசிலம்பட்டி, 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வீரபாண்டி. இந்த ஊரை சேர்ந்த ஆண்டி மகன் பாண்டி (வயது50). இவர் உசிலம்பட்டி அருகே உள்ள குன்னூத்துப்பட்டியில் ஒரு தோட்டத்தில் வெட்டப்பட்ட கரும்பை டிராக்டரில் ஏற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது டிராக்டர் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதில் சிக்கி டிரைவர் பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்