டெம்போ மோதி விவசாயி பலி

டெம்போ மோதி விவசாயி பலியானார்.

Update: 2022-08-10 23:07 GMT

ஓமலூர்:

ஓமலூரை அடுத்த பச்சனம்பட்டி கோல்காரனூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 67), விவசாயியான இவருக்கு சொந்தமான நிலம், பொம்மியம்பட்டி அருகே உள்ளது. கந்தசாமி நேற்று தனது தோட்டத்திற்கு செல்வதற்காக சுண்டக்காப்பட்டி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த டெம்போ மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கந்தசாமி பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கந்தசாமியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் கந்தசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்