மங்களபுரம் அருகே மொபட் மீது ஆட்டோ மோதி தொழிலாளி பலி

மங்களபுரம் அருகே மொபட் மீது ஆட்டோ மோதி தொழிலாளி பலி;

Update: 2022-07-24 14:15 GMT

நாமகிரிப்பேட்டை:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 36). மும்பையில் கூலித்தொழிலாளியாக ேவலை செய்து வந்தார். இவருடைய மனைவி அகிலா (30). இந்த நிலையில் மகேந்திரன் மொபட்டில் மெட்டாலா வந்துவிட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது மங்களபுரம் அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று மொபட் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். தகவல் அறிந்து வந்த மங்களபுரம் ேபாலீசார் மகேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மங்களபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலகவதி வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்