அரசு பஸ் பள்ளத்தில் பாய்ந்து 4 பேர் படுகாயம்
அரசு பஸ் பள்ளத்தில் பாய்ந்து 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பத்தூர்,
தேவகோட்டையில் இருந்து மதுரைக்கு அரசு பஸ் சென்றது. பஸ்சை பட்டுக்கோட்டையை சேர்ந்த சண்முகம் மகன் ரவி ஓட்டி வந்துள்ளார். திருப்பத்தூர் அருகே தம்பிபட்டியில் உள்ள நாவிதர்பாலம் வளைவில் வளையும்போது எதிரே வந்த வாகனத்தை மற்றொரு வாகனம் கடக்க முயன்றபோது பஸ் நேருக்கு நேர் வந்ததால் அந்த வாகனத்தில் மோதாமல் இருக்க டிரைவர் பஸ் நிறுத்த முயன்றார். அப்போது நிலைதடுமாறிய பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. அப்போது பயணிகள் அலறினர். விபத்தில் 35 பேர் கயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.திருமயத்தை சேர்ந்த சுகன்யா (29), நெற்குப்பையைச் சேர்ந்த ஆறுமுகம் (50), திருப்பத்தூர் புதுத்தெருவைச் சேர்ந்த உசேன், சினேகா ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்ாக அனுப்பி வைக்கப் பட்டனர். விபத்து குறித்து திருப்பத்தூர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.