லாரி-கார் நேருக்குநேர் மோதல்
லாரி-கார் நேருக்குநேர் மோதியதில் கணவன்,மனைவி படுகாயம் அடைந்தனர்.;
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லாசர் என்பவர் மகன் வேதமாணிக்கம் (வயது57). இவர் மனைவி ரூபிஏவாஞ்சலினுடன் உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக காரில் திருச்சி சென்றுள்ளார். பின்னர் திருப்பத்தூர் திரும்பிய போது காரையூர் அருகே சோழம்பட்டி விலக்கு என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் கார் உருக்குலைந்தது. இதில் படுகாயம் அடைந்த கணவன்,மனைவி 2 பேரும் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கண்டவ ராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.