மோட்டார் சைக்கிள் மோதி டீக்கடைக்காரர் சாவு

மோட்டார் சைக்கிள் மோதியதில் டீக்கடைக்காரர் இறந்தார்.;

Update: 2023-10-21 19:00 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அப்பாதுரை (வயது 62). இவர் பாப்பாரப்பட்டி- தர்மபுரி சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே டீக்டை நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கடை முன்பு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அப்பாதுரை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்