மத்தூர் அருகேகார் டிரைவர் விபத்தில் பலி

Update: 2023-08-07 19:00 GMT

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள செட்டிமாரம்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 43), கார் டிரைவர். கிருஷ்ணகிரியில் குடியிருந்து வரும் இவர் கல்குவாரிகளுக்கு கார் ஓட்டும் பணியை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம் போல தொகரப்பள்ளி அருகே உள்ள கல்குவாரிக்கு சென்ற அவர் தனது பணி முடிந்து கிருஷ்ணகிரிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். தொகரப்பள்ளி காட்டின் வழியே ஒரு வளைவில் மோட்டார் சைக்கிள் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு மரத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே சிவகுமார் உயிரிழந்தார். விபத்தில் பலியான குமாருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்