அகஸ்தியர் அருவிக்கு செல்ல 3 நாட்கள் தடை

பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு செல்ல 3 நாட்கள் தடை விதிக்கபபட்டு உள்ளது.

Update: 2023-08-18 19:12 GMT

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடித்திருவிழாவின் அனைத்து நாட்களிலும் அனைத்து அரசு துறைகளுக்கும் சிறப்பான ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கோவிலில் இருந்து பக்தர்கள் கீழே இறங்குவதற்காக அரசு மற்றும் தனியார் வாகனங்கள் நேற்று முதல் அனுமதிக்கப்பட்டு பொதுமக்கள் கீழே இறங்கி வருகிறார்கள்.

இன்று (சனிக்கிழமை) முதல் நாள் மறுநாள் (திங்கட்கிழமை) வரை 3 நாட்களும் தூய்மை பணி காரணமாக பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் கோவிலுக்கு பொதுமக்கள் யாருக்கும் அனுமதி இல்லை. தூய்மை பணிக்காக செல்லும் வாகனங்கள் தவிர்த்து எவ்வித அரசு பஸ்களோ, தனியார் வாகனங்களோ செல்ல அனுமதி இல்லை. இந்த 3 நாட்களுக்கு பாபநாசம் சோதனை சாவடி மூடப்படுகிறது. பொதுமக்கள் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வழக்கம்போல் கோவிலுக்கு சென்று வரலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்