உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்பு
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்கப்பட்டது.;
கீழப்பழுவூர் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தில் "உலக சுற்றுப்புறச்சூழல் தினம்" கொண்டாடப்பட்டது. அப்போது இந்த ஆண்டின் கருப்பொருளான "பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்லுங்கள்'' (சிறந்த பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் வாழ்க்கை) என்ற தலைப்பில் ஆலைத்தலைவர் முத்தையா விளக்கி கூறினார். இதையடுத்து, மரக்கன்று நடப்பட்டு உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்தநிகழ்ச்சியில் ஆலையின் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.