கல்லூரி கல்வி இணை இயக்குனர் பதவி ஏற்பு

கல்லூரி கல்வி இணை இயக்குனர் பதவி ஏற்பு;

Update: 2023-05-04 20:03 GMT

தஞ்சை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனராக பேராசிரியர் தனராஜன் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இவர் கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி (தன்னாட்சி), பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல்வராகவும் பணியாற்றினார். 1991- ல் கடலூர் தூயவளனார் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக கல்விப் பணியைத் தொடங்கிய இவர் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி, மன்னார்குடி அரசினர் கலைக் கல்லூரி, திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி, ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி, பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியராக 32 ஆண்டுகள் பணியாற்றியவர் ஆவர். இவர், தமிழ் இலக்கியத்தில் 10 நூல்கள் வெளியிட்டுள்ளார். இவரது நெறிகாட்டலில் 24 பேர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். 120 மாணவர்கள் எம்.பில் பட்டம் பெற்றுள்ளனர். 180 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். 210 தேசிய, பன்னாட்டு கருத்தரங்குகளில் பங்கேற்றவர். பட்டிமன்றம், கவியரங்கம். வழக்காடு மன்றம், என 5000க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்றவர். பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பி.ஏ., எம்.ஏ., பாடத்திட்டக் குழுக்களின் தலைவராக இருந்தவர் ஆவார். அவருக்கு கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்