போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2023-08-12 19:00 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் அணி எண்கள் 49, 50 சார்பில் போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமையில், பேராசிரியர்கள், மாணவிகள் 'ஆரோக்கியமான வளமான போதையில்லா தேசத்தை உருவாக்குவோம்' என்று போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஜான்சி ராணி, சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்