போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

நெல்லை அரசு ஆஸ்பத்திரி, பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2023-08-11 23:20 GMT

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பில் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் மருத்துவ பயிற்சி மாணவிகள், பாரா மெடிக்கல், செவிலியர் பயிற்சி மாணவர்கள் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சிக்கு நிர்வாக அலுவலர் செந்தில் முன்னிலை வகித்தார். மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், துணை கண்காணிப்பாளர் முகமது ரபீ, டாக்டர் ஆறுமுகம், மனநலப்பிரிவு மற்றும் போதை மறுவாழ்வு மைய பேராசிரியர் டாக்டர் ராமானுஜம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை சந்திப்பு போலீஸ் சார்பில், சாப்டர் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக துணை கமிஷனர் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் அருள்தாஸ் ஜெபக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு துணை போலீஸ் கமிஷனர் அனிதா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) சுகன்யா முன்னிலை வகித்தார். கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலால் உதவி ஆணையர் ராமநாதன், கோட்ட கலால் அலுவலர்கள் இசக்கிபாண்டி, ஆவுடையப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்