தலைமறைவாக இருந்த புதுச்சேரி வாலிபர் கைது
சாராய வழக்கு: தலைமறைவாக இருந்த புதுச்சேரி வாலிபர் கைது;
திண்டிவனம்
திண்டிவனம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலி சாராய பாக்கெட்டுகள் தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட ராஜா என்பவரை திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த புதுச்சேரி, கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்த முருகன் மகன் அய்யப்பன்(வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.