தலைமறைவாக இருந்த அண்ணன், தம்பி கைது
வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த அண்ணன், தம்பி கைது;
திண்டிவனம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சோமண்டார்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகன்கள் பிரசாந்த்(வயது 24), தினேஷ்(23). இவர்கள் மீதான வழிப்பறி வழக்கு திண்டிவனம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அண்ணன், தம்பி இருவரும் கடந்த 10.6.2022 முதல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த பிரசாந்த், தினேஷ் இருவரையும் கைது செய்து கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி இளவரசி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.