இரட்டைக்கொலை குற்றவாளி பற்றி துப்பு கொடுத்தால் சன்மானம்

முட்டத்தில் நடந்த இரட்டைக்கொலை குற்றவாளி பற்றி துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் அறிவித்து உள்ளார்.;

Update: 2022-06-10 21:30 GMT

ராஜாக்கமங்கலம்:

முட்டத்தில் நடந்த இரட்டைக்கொலை குற்றவாளி பற்றி துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் அறிவித்து உள்ளார்.

இரட்டைக்கொலை

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள முட்டம் தூய குழந்தை ஏசு தெருவை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவருடைய மனைவி பவுலின் மேரி (வயது48). இவர்களுக்கு ஆலன் (25), ஆரோன் (19) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஆன்றோ சகாயராஜுடன், ஆலன் துபாயில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

ஆரோன் சென்னையில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இதனால் வீட்டில் பவுலின் மேரிக்கு துணையாக, அவருடைய தாயார் திரேசம்மாள் (90) இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு வீட்டில் இருந்த பவுலின் மேரியும், திரேசம்மாளும் மர்ம நபர்களால் அடித்து ெ்காலை ெ்சய்யப்பட்டு, 15 பவுன் நகைகள் கொள்ளையடித்து செல்லப்பட்டன.

4 தனிப்படை

இதுபற்றி வெள்ளிச்சந்தைபோலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பல்வேறு கோணங்களில் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

மேலும் கொலை நடந்த வீட்டின் பக்கத்து தோப்பில் ஒரு மங்கி குல்லாவும் ஒரு தேய்ப்பு பெட்டியும் கண்டெடுக்கப்பட்டது. இது கொலையாளி பயன்படுத்திய மங்கி குல்லாவாக இருக்கலாம் என்று பேர்லீசார் கருதி விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலை நடந்த இடத்தை சுற்றியுள்ள 2 கி.மீ. தூரத்துக்குள் பயன்படுத்தப்பட்ட செல்போன் தகவல் பரிமாற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

சன்மானம்

இந்த நிலையில் இரட்டைக்கொலையில் ஈடுபட்ட குற்றவாளி பற்றி துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் அறிவித்து உள்ளார்். இதுதொடர்பான தகவல் வாட்ஸ்-அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இரட்டைக்கொலை நடந்த இடத்தில் முக்கிய தடயமாக மங்கி குல்லா ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இது வெளிப்புறத்தில் சிவப்பு நிறமாகவும் உள்புறத்தில் பிஸ்கெட் நிறத்திலும் உள்ளது. வியாபாரிகள், பொதுமக்கள் விற்பனை பிரதிநிதிகள் இதுபோன்ற குல்லாவை மொத்தமாகவோ சில்லறையாகவோ விற்பனை செய்திருந்தாலோ அல்லது பொதுமக்கள் இதுபோன்ற குல்லாவை அணிந்து வந்திருந்தாலோ போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும். தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல் கொடுப்பவர் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும். தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் :99444 78704 ஆகும். எந்த நேரமும் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்