செல்போன் நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் அபேஸ்

திண்டிவனத்தை சேர்ந்த செல்போன் நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-09-12 17:10 GMT

விழுப்புரம், 

திண்டிவனம் சிந்து நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி மகன் இளங்கோவன் (வயது 29). இவர் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 9-ந் தேதி மதியம் 1 மணியளவில் இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர் ஒருவர், தான் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து பேசுவதாகவும், நீங்கள் பயன்படுத்தி வரும் கிரெடிட் கார்டு லிமிட்டின் லெவலை ரூ.7 லட்சத்து 30 ஆயிரத்திலிருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்க செய்து தருவதாக கூறியுள்ளார். மேலும் இளங்கோவனிடம் கிரெடிட் கார்டு எண், ஓ.டி.பி. எண் உள்ளிட்டவற்றையும் அந்த நபர் கேட்டுள்ளார். அதனை உண்மை என நம்பிய இளங்கோவன், மர்மநபர் கேட்டபடி அனைத்து விவரங்களையும் அவரிடம் கூறியுள்ளார்.

ரூ.1 லட்சம் அபேஸ்

அதன் பிறகு சில நிமிடங்களில் இளங்கோவனின் கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 680-ஐ இரு தவணைகளாக எடுத்து விட்டதாக திண்டிவனத்தை சேர்ந்த செல்போன் நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

இதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்த இளங்கோவன், இதுபற்றி விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, சப்- இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்