அப்துல்கலாம் நினைவு தினம்
மாவட்டத்தில் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
மாவட்டத்தில் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களில் அப்துல்கலாமின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது அப்துல் கலாம் குறித்து தன்னார்வலர்கள் எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிகல்வி திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை, ஆசிரிய பயிற்றுனர் செல்வம், ஐ.டி.கே. ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்
ஆலங்குளம் அருகே உள்ள காளவாசல் கிராமத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வத்திராயிருப்பு கிரீன் பீல்ட்ஸ் தொடக்கப்பள்ளி மற்றும் சுந்தரபாண்டியன் விவேகா தொடக்கப்பள்ளியில் அப்துல் கலாம் நினைவுதினத்தை முன்னிட்டு போதைப்பொருள்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு பள்ளி தாளாளர் பெரிய மகாலிங்கம் தலைமை வகித்தார். அறிவொளி முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர்கள் ஜெயக்கொண்டம்மாள், செந்தில் குமாரி, அலையன்ஸ் சங்க மண்டல தலைவர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அலையன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் முகேஷ் சதாசிவம் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முடிவில் ஆசிரியை நல்லதாய் நன்றி கூறினார்.
அருப்புக்கோட்ைட
அதேபோல அருப்புக்கோட்டை விஸ்வாஸ் கல்வி குழுமத்தின் சார்பில் அப்துல் கலாமின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பள்ளி குழுமத்தின் செயலாளர் பழனிவேல் ராஜன், பள்ளி இயக்குனர்கள் மகாலட்சுமி, தியாகேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மரக்கன்றுகள்
அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகரில் மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்ய செயலாளர் காளிதாஸ் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் பொது மக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கமல் கண்ணன், நெல்சன்தாஸ், பழனீஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.