மூதாட்டியிடம் 2 பவுன் நகை அபேஸ்
மூதாட்டியிடம் 2 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது.;
புதுக்கோட்டையை சேர்ந்தவர் பாத்திமா மாரி (வயது 66). இவர் சம்பவத்தன்று வயலோகத்தில் இருந்து புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு டவுன் பஸ்சில் வந்தார். அப்போது அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை கழுத்தில் அணிய வேண்டாம் எனவும், திருட்டு போகிவிடும் என பெண் ஒருவர் கூறியிருக்கிறார். மேலும் அந்த சங்கிலியை கழற்றி கொடுக்கும்படியும், தான் ஒரு தாளில் பாதுகாப்பாக வைத்து மடித்து தருவதாக கூறி அவரிடம் இருந்து 2 பவுன் சங்கிலியை பெற்றுக்கொண்டார். பின்னர் ஒரு பொட்டலத்தை கொடுத்து விட்டு பஸ் நிலையம் வந்ததும் அந்த பெண் சென்றார். பொட்டலத்தில் சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த பாத்திமா மாரி புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்போில் நகையை அபேஸ் செய்த பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.