ஆவின் பொருட்களின் விலை மீண்டும் உயர்வு; இன்று முதல் அமல்
ஆவின் பொருட்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.;
சென்னை,
தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனையுடன் நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி, பால் பவுடர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆவின் விற்பனையகங்களில், பனீர் மற்றும் பாதாம் மிக்ஸ் பொருட்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. ஆவின் பால் பொருட்களின் விலை ரூ. 20 முதல் ரூ.100 வரை உயர்த்தி ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஒரு கிலோ பனீர் ரூ. 450 க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ. 550 ஆக உயர்ந்துள்ளது.
* பனீர் 1 கி.கி - ரூ.550
* பனீர் 1/2 கி.கி - ரூ. 300
* பனீர் 200 கி - ரூ.120
* பாதாம் மிக்ஸ் 200 கிராம் - ரூ.120