ஆவின் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை

திருப்பத்தூர் மாவட்டத்தில் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்படும் என ஆவின் பொதுமேலாளர் தெரிவித்தார்.

Update: 2022-11-11 18:48 GMT

திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலை கடையில் பணிபுரியும் விற்பனையாளர்கள் பணியாளர்கள் சார்பில் தமிழ்நாடு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருப்பத்தூர் ெரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள அரிமா சங்கம் கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வி சுரேஷ் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் எம்.ஜெயக்குமார், ரமேஷ், கர்ணன், முன்னிலை வகித்தனர். வி.குமார், வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக மாநில பேரவை செயலாளர் ரா.பொன்னுராம், கலந்துகொண்டு பேசினார் நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவர் மாணிக்கம், மாவட்ட கவுன்சில் செயலாளர் கலையரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத்குமார், உள்பட பலர் பேசினர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் ஊழியர்கள், கலந்து கொண்டனர்.

முன்னதாக திருப்பத்தூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக எம்.ஜெயக்குமார், செயலாளராக லி.சுரேஷ், அமைப்புச் செயலாளராக ஆர்.கர்ணன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் தேரவு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலை கடை பணியாளர்களை ஒரே துறையின் கீழ் நியமித்து தமிழக அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் குட்டி நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்