ஆனி தேரோட்டம்: நெல்லை மாவட்டத்திற்கு ஜூலை 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை

நெல்லை காந்திமதியம்மன் கோவிலில் ஆனி தேரோட்டம் நடைபெற உள்ளதால் நெல்லை மாவட்டத்திற்கு ஜூலை 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-24 15:59 GMT

நெல்லை,

நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோவில் ஆனித் திருவிழா வருகிற 3-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11-ந் தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெற உள்ளது. இவ்விழா சிறப்பாக நடைபெற நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் நெல்லை மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவிலில் ஆனி தேரோட்டம் விழாவை முன்னிட்டு ஜூலை 11-ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்