ஆலடி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா

வாய்மேடு ஆலடி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா குதிரை வாகனத்தில் வீதி உலா

Update: 2023-08-02 18:45 GMT

வாய்மேடு:

நாகை மாவட்டம் வாய்மேட்டில் ஆலடி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் தினமும் மாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும், பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான குதிரை வாகனத்தில் சாமி வீதி உலா வருதல் மற்றும் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திருநீறு உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்