சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா

2 ஆண்டுகளுக்கு பிறகு சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுகிறது.

Update: 2022-07-06 20:03 GMT

வத்திராயிருப்பு, 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடி அமாவாசை திருவிழாவானது மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்தநிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வருகிற 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அரங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் செய்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்