தபால் அலுவலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தபால் அலுவலகங்களில் ஆதார் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது.;

Update: 2023-01-09 18:17 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் ஆதார் அட்டை பெறுவதற்காக இன்றும் (செவ்வாய்க் கிழமை) மற்றும் நாளை (புதன் கிழமை) ஆகிய இரு நாட்கள் சிறப்பு ஆதார் முகாம் ராணிப்பேட்டை தலைமை தபால் அலுவலகம், அரக்கோணம் தலைமை தபால் அலுவலகம், நெமிலி, காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், திமிரி, கலவை, ஆகிய தபால் அலுவலகங்களில் நடைபெறுகிறது. இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆதார் அட்டைகளில் திருத்தங்கள், குழந்தைகளுக்கான புதிய ஆதார் பதிவு, செல்போன் எண், கை ரேகை, புகைப்படம், பிறந்த தேதி மற்றும் முகவரி மாற்றம் ஆகிய செய்து கொள்ளலாம். இம்முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த தகவலை அரக்கோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்