ஆதார்,ரேஷன் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார்,ரேஷன் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என துணை பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.;
மயிலாடுதுறை சரக துணைப்பதிவாளர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் விவரங்களை சங்கத்தில் தவறாது சமர்ப்பித்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் விவரங்களை உறுப்பினர் எண்ணுடன் சேர்க்கப்படாவிட்டால் கூட்டுறவு சங்க தேர்தலில் தகுதியான வாக்களிக்கும் உறுப்பினராக தாங்கள் கருதப்பட மாட்டீர்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. எனவே, அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினராக உள்ள அனைவரும் வருகிற 30-ந் (சனிக்கிழமை) தேதிக்குள் தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் விவரங்களை தொடர்புடைய சங்கத்தில் சமர்ப்பித்து தங்களை தகுதியான வாக்களிக்கும் உரிமை உள்ள உறுப்பினராக்கி கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் எதிர்வரும் கூட்டுறவு தேர்தலில் வாக்களிக்கவோ அல்லது தேர்தலில் போட்டியிடவோ இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.