வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு முகாம்
செங்கோட்டையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு முகாம் நடந்தது.;
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் வாக்காளா் அட்டையை ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு நகராட்சி சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது வாக்காளா் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து சென்றனா். இதேபோல் செங்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. நிகழச்சியில் சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி, வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனா்.