தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் தவறாக பேசிய வாலிபர் கைது

தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் தவறாக பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-06-11 23:00 GMT

கோவை

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் வினிதா (வயது 22). இவர் தனியார் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வங்கியில் கடன் வாங்கிவிட்டு மாதத் தவணை கட்டாமல் இருந்த கோவை கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த வினோத் (27) என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு வினிதா கடன் தொகை குறித்து கேட்டார்.

அப்போது வினோத் அவரிடம் தகாத முறையில் பேசி பணம் கட்ட மறுத்துவிட்டார். மேலும் தனது நண்பர் ஒருவருக்கு கான்பரன்ஸ் அழைப்பு போட்டு வினிதாவை கிண்டல் செய்து பேசி உள்ளார். இது தொடர்பாக வினிதா கொடுத்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்