கைக்குழந்தையுடன்இளம்பெண் மாயமானார்

கயத்தாறு அருகே கைக்குழந்தையுடன்இளம்பெண் மாயமானார்

Update: 2022-11-25 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் கிராமத்தில் வசித்து வருபவர் மருதராஜ் (வயது 27). இவர் தனியார் கம்பெனி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி கன்னியம்மாள்( 23). இவர்களுக்கு ஆண்குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் கயத்தாறிலுள்ள கடைக்கு செல்வதாக குழந்தையுடன் கன்னியம்மாள் சென்றுள்ளார். பின்னர் அவர் வீடுதிரும்பவில்லை. கணவர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து மருதராஜ் கொடுத்த புகாரின் பேரில் கயத்தாறு ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்