மதுபோதையில் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்ட வாலிபர்
திருநாகேஸ்வரம் கடைவீதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த வாலிபர் மதுபோதையில் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
திருவிடைமருதூர்;
திருநாகேஸ்வரம் கடைவீதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த வாலிபர் மதுபோதையில் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுபோதையில் வாலிபர்
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் கடைவீதியில் நேற்று மாலை திருநீலக்குடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் பணியில் இருந்தார். அப்போது இரவு 7 மணி அளவில் அங்கு மதுபோதையில் வந்த வடகரை கீழத்தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜ்(வயது24) பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளரை செல்போனில் படம் பிடித்தார். பின்னர் அவர் நீ(சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்) குடித்துவிட்டு வந்து பணி செய்கிறாய் என கூறி தகராறு செய்தார். தொடர்ந்து ஆரோக்கியராஜ் சாலையில் படுத்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கடைவீதியில் மக்கள் கூட்டம் திரண்டது.
பரபரப்பு
இருப்பினும் பொறுமையை கடைபிடித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் கடைவீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதும் உதவிக்கு மேலும் 2 போலீசாரை அழைத்தார். இதைத்தொடர்ந்து தகவல் அறிந்து வந்த 2 போலீசார் சாலையில் படுத்து இருந்த வாலிபரை அப்புறப்படுத்தினர். அவா்களிடமும் வாக்குவாதம் செய்த ஆரோக்கியராஜ் அங்கிருந்து செல்ல மறுத்தார். இதனால் போலீசாரின் பரிதாப நிலையை அப்பகுதி மக்கள் வேதனையுடன் பார்த்தனர். பின்னர் ஆரோக்கியராஜை ஆட்டோவில் வைத்து திருநீலக்குடி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.