சிறுமி பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சின்னாளப்பட்டி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-10-04 19:44 GMT

சின்னாளப்பட்டி அருகே உள்ள பிள்ளையார்நத்தத்தை சேர்ந்தவர் விவேக் (வயது 30). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் விவேக், 1-ம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அந்த சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

அப்போது சிறுமியிடம் அவளது பெற்றோர் கேட்டபோது, விவேக் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தாள். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, விவேக்கை கைது செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்