தேனியில் மாமியாரை தாக்கிய வாலிபர் கைது

தேனியில் மாமியாரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-09-27 21:15 GMT

தேனி வெங்கலா கோவில் தெருவை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (வயது 23). இவருடைய மனைவி ராமலட்சுமி. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ராமலட்சுமி கணவரை பிரிந்து கே.ஆர்.ஆர். நகரில் உள்ள தனது தாய் சாந்தியுடன் (45) வசித்து வருகிறார். இந்த நிலையில் கே.ஆர்.ஆர். நகருக்கு வந்த லிங்கேஸ்வரன் தனது மாமியாரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினார். இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து லிங்கேஸ்வரனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்