தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு சாவு

தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு இறந்தார்.;

Update:2022-08-31 00:42 IST

ஜோலார்பேட்டை

தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு இறந்தார்.

ஆம்பூரை அடுத்த பெரியங்குப்பம் எம்.சி.ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் கலையரசன் (வயது 54) தச்சுத்தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு தமிழரசி என்கிற மனைவியும் 3 மகன் கள் 2 மகள்கள் உள்ளன.நேற்று கலையரசன் விண்ணமங்கலம் ஆம்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார் அப்போது காட்பாடி பகுதியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி உயிரிழந்தார்.

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்