ஆண்டிப்பட்டி அருகே வாகனம் மோதி பெண் பலி

ஆண்டிப்பட்டி அருகே வாகனம் மோதி பெண் பலியானார்.;

Update: 2023-08-07 20:45 GMT

ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த சங்கையா மனைவி பழனீஸ்வரி (வயது 55). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அங்கு தேனி-மதுரை சாலையை அவர் கடக்க முயன்றார். அந்த நேரத்தில் வேகமாக வந்த வாகனம் ஒன்று பழனீஸ்வரி மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில், தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பழனீஸ்வரி உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்