2 குழந்தைகளுடன் பெண் திடீர் மாயம்
சின்னசேலம் அருகே 2 குழந்தைகளுடன் பெண் திடீர் மாயம் போலீசில் கணவர் புகார்;
சின்னசேலம்
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மஞ்சினி கிராமம், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி மகன் மணிகண்டன்(வயது 31). இவருக்கும் சந்தியா (24) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கிருபாஷினி(4) புவஸ்ரீ(5 மாதம்) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் வேலைக்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் சந்தியா தனது இரு குழந்தைகளையும் அைாத:து கொண்டு சின்னசேலத்தை அடுத்த தென் செட்டியந்தல் கிராமத்தில் உள்ள மணிகண்டனின் பெரியப்பா வீட்டு கோவில் திருவிழாவுக்காக சென்றார். அங்கு திருவிழா முடிந்ததும் மீண்டும் ஆத்தூர் மஞ்சினிக்கு வருவதாக கூறிய சந்தியாக வீடு வந்து சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.