சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் மர்மநபரால் வெட்டப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.!
ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
சென்னை,
சென்னை, சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயிலில் பழம் விற்கும் ராஜேஸ்வரி என்ற பெண்ணை, மர்ம நபர் ஒருவர் சரமாரியாகக் கத்தியால் வெட்டியுள்ளார்.
ராஜேஸ்வரி ரெயில் இருந்து இறங்கி நடந்து வந்த போது அதே ரெயிலில் வந்த அடையாளம் தெரியாத நபர் இந்த தாக்குதல் நடத்தியுள்ளார். ராஜேஸ்வரியைக் கத்தியால் வெட்டி விட்டு அதே ரெயிலில் ஏறி அந்த நபர் தப்பிச்சென்றார்.
படுகாயமடைந்த பெண் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் ராஜேஸ்வரிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை வலை வீசி தேடி வருகின்றனர்.