சாத்தூர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ெதாழிலாளி சாவு

மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ெதாழிலாளி இறந்தார்.

Update: 2023-09-07 21:39 GMT

சிவகாசி, 

சாத்தூர் அருகே உள்ள மேலச்சிறுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 53). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சாத்தூருக்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விட்டு வந்துள்ளார். வரும் வழியில் சிறுகுளம் காலனி பஸ் நிறுத்தம் அருகில் வரும் போது திடீரென நிலைதடுமாறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாரியப்பனை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மாரியப்பன் மகன் ஆனந்த் அப்பையநாயக்கன்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்