தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை
பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.;
பந்தலூர் அருகே சேரம்பாடி டேன்டீ ரேஞ்ச் எண்.1, சேரங்கோடு, படச்சேரி, எலியாஸ் கடை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அங்கு விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் சேரம்பாடி டேன்டீ ரேஞ்ச் எண்.1-ல் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டு யானை புகுந்தது. இதனால் அங்கு பச்சை தேயிலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த சேரம்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையை விரட்டினர். தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானை அட்டகாசத்தால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.