200 வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானை

கூடலூர் அருகே 200 வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-15 18:45 GMT

கூடலூர், 

கூடலூர் தாலுகா ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட கோழிக்கண்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. தொடர்ந்து தோட்டத்துக்குள் காட்டு யானை புகுந்து அங்கு பயிரிட்டு இருந்த வாழைகளை தின்று சேதப்படுத்தியது. பின்னர் அதிகாலையில் யானை அங்கிருந்து சென்றது. வழக்கம்போல் தோட்டத்திற்கு வந்த விவசாயிகள் மனோஜ், கோபால் ஆகியோர் நன்கு பராமரித்து வந்த வாழை மரங்களை காட்டு யானை தின்று நாசம் செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த கூடலூர் வனவர் செல்லதுரை, வனக்காப்பாளர்கள் மாதவன், சிவக்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது 200-க்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு யானை சேதப்படுத்தியது தெரியவந்தது. அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். உரிய ஆவணங்களை சமர்ப்பித்த உடன் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து இழப்பீடு தொகை வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்