கூடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை மறித்து நின்ற காட்டு யானையால் பரபரப்பு

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று சாலையை மறித்தவாறு அங்கேயே சிறிது நேரம் நின்றது.;

Update: 2022-10-09 20:33 GMT

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தொரப்பள்ளியில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று உலா வந்தது. அந்த யானை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து சாலையை மறித்தவாறு அங்கேயே சிறிது நேரம் நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அதன் அருகில் செல்லாமல் விலகியே நின்றனர்.

இதன் காரணமாக அந்த சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த யானை ஒருவழியாக வனப்பகுதிக்குள் சென்றதால், மீண்டும் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. 

Tags:    

மேலும் செய்திகள்