நெடுஞ்சாலையில் நின்ற காரை ஆக்ரோஷமாக முட்டி தூக்கிய காட்டுயானை - பரபரப்பு வீடியோ
மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று வாகனத்தை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.;
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று வாகனத்தை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்தப் பகுதியில், காட்டு யானை ஒன்று நீண்ட நேரம் உலாவியது. அங்கு காத்திருந்த மக்கள், யானையை புகைப்படம் எடுக்க முற்பட்டனர்.
அப்போது, யானை திடீரென வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. யானைகளை புகைப்படம் எடுக்க முயற்சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.