பக்கத்து வீட்டுக்காரர்கள்ஆபாசமாக பேசி மிரட்டியதால் விதவை பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆபாசமாக பேசியதால் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு விதவைப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-27 15:19 GMT

வாலாஜா

பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆபாசமாக பேசியதால் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு விதவைப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்பம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள அணைக்கட்டு ரோடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் சசிகலா (வயது 36). இவரது கணவர் வினோத்குமார் (40) சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும் எட்டு வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சசிகலாவிற்கும் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையே வீட்டின் சொத்து பிரச்சினை சம்பந்தமாக வழக்கு நடைபெற்று வருகிறது.

பக்கத்து வீட்டுக்காரர்கள் பிரச்சினை செய்து வந்ததால் சசிகலா மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் பள்ளியில் இருந்து அவரது மகன் வீடு திரும்பியபோது உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது தாய் சசிகலா தூக்கில் தொங்கியதை கண்டு உறவினர்களிடம் தெரிவித்தான்.

தற்கொலை

உடனே அவர்கள் வந்து பார்த்தபோது சசிகலா இறந்து கிடந்தார். போலீசாரும் அங்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். அப்போது அவரது கணவர் வினோத்குமாரின் புகைப்படத்துக்கு மேல் தற்கொலைக்கான காரணமானவர்கள் குறித்து சசிகலா கடிதம் எழுதி வைத்துள்ளார்.

அதில் ஆபாசமாக பேசி மிரட்டியதால் தற்கொலை செய்வதாக கூறியிருந்தார். அதில் ஆபாசமாக பேசியவர்களின் பெயர்களையும் எழுதி வைத்திருந்தார்.

உடல் ஒப்படைப்பு

பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

சசிகலாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து வாலாஜா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்