வாலாஜாவில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்

வாலாஜாவில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2022-07-07 18:34 GMT

சென்னை-மும்பை தேசியநெடுஞ்சாலை வாலாஜா நகரில் செல்கிறது. இச்சாலை மிகவும் பரபரப்புடன் காணப்படும். வாலாஜா பழைய தேரடி அருகில் 'பார்வை குறைவான வளைவு' என்ற வாசகம் அடங்கிய பெயர் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இப்பலகை வைத்து பல ஆண்டுகள் ஆனதால், அதில் உள்ள வாசகங்கள் எதுவும் தெரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பழைய எச்சரிக்கை பலகையை அகற்றிவிட்டு புதிய எச்சரிக்கை பலகை வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்