ரோந்து சென்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல்

ரோந்து சென்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2023-10-05 18:45 GMT

காரியாபட்டி

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா, ஆத்திகுளம் குரூப் கிராம நிர்வாக அதிகாரி திருப்பதி (வயது 44) மற்றும் தலையாரி சண்முகசிவா ஆகியோர் சேர்ந்து உழுத்திமடை-புதையனேந்தல் சாலை பகுதி அருகே மணல் திருட்டு சம்பந்தமாக ரோந்து சென்றபோது உழுத்திமடை கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவர் கிராம நிர்வாக அதிகாரி திருப்பதி, தலையாரி சண்முகசிவா ஆகியோரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்தும்அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி திருப்பதி கட்டனூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் கட்டனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்