பழங்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

பழங்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் காயம் அடைந்தனர்.;

Update: 2023-08-04 17:59 GMT

மதுரையில் இருந்து ஒரு லாரி சேலத்திற்கு பழங்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த லாரி நேற்று இரவு கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியின் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் காயம் அடைந்தார். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காயம் அடைந்த லாரி டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து போக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்