படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்ததால் பஸ் மீது கல்வீச்சு
படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்ததால் வாலிபர்கள் பஸ் மீது கல்வீசி தாக்கினர்.;
வேலூரில் இருந்து காட்பாடி அடுத்த குப்பிரெட்டிதாங்கல் வரை செல்லும் அரசு பஸ் வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்திலிருந்து சிறிது தூரம் வரை சென்றுள்ளது. அப்போது படியில் தொங்கியபடி 3 வாலிபர்கள் பயணம் செய்துள்ளனர். இதனைக் கண்ட பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் படியில் தொடங்கிக் கொண்டு பயணிக்க வேண்டாம். உள்ளே செல்லுங்கள் என அறிவுரை கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் கீழே இறங்கி கற்களை எடுத்து பஸ் மீது வீசி உள்ளனர். இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டார். மேலும் படியில் பயணம் செய்தால் பஸ்சை எடுக்க மாட்டோம் என கூறி காட்பாடியில் சிறிது தூரம் சென்று பஸ்சை நிறுத்தி விட்டார். உடனே பொதுமக்களும், பஸ்சில் பயணம் செய்த மற்ற பயணிகளும் அந்த 3 வாலிபர்களையம் கண்டித்து பஸ்சின் உள்ளே செல்லும்படி அறிவுறுத்தினர். அதன்பேரில் அவர்கள் உள்ளே சென்றனர்.
இந்த சம்பவத்தால் சுமார் 15 நிமிடம் தாமதமாக பஸ் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.