சாலையில் விழுந்த மரம்

பலத்த காற்று வீசியதால் கீழக்கரையில் சாலையில் மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.;

Update: 2022-11-18 18:45 GMT

கீழக்கரை,

கீழக்கரை பேட்டை தெருவில் 100 ஆண்டு பழமையான மரம் ஒன்று நேற்று வீசிய பலத்த காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் கீழே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான், தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் பழனிக்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லா துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி, பாலா மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை அகற்றினர்..அப்போது நகர்மன்ற உறுப்பினர்கள் நவாஸ், பயாஸ்தீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்