விக்கிரவாண்டியில் மரக்கட்டைகள் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

விக்கிரவாண்டியில் மரக்கட்டைகள் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிப்பு பாதிக்கப்பட்டது.;

Update: 2023-10-03 18:45 GMT

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டியில் இருந்து கொய்யா மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு டிராக்டர் டிப்பர் ஒன்று முண்டியம்பாக்கம் நோக்கி புறப்பட்டது. அந்த டிராக்டரை விக்கிரவாண்டியை சேர்ந்த நாகராஜ் என்பவர் ஓட்டிச் சென்றார். விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகே சென்றபோது திடீரென டிராக்டர் டிப்பர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் நாகராஜ் பலத்த காயமடைந்தார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விபத்தில் சிக்கிய நாகராஜை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான டிராக்டர் டிப்பரை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்