கரும்புகள் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்தது

கரும்புகள் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;

Update: 2023-04-19 18:31 GMT

புகழூரில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து டிராக்டர்கள், லாரிகள் மூலம் தினசரி கரும்புகள் ஏற்றிக்கொண்டு 24 மணி நேரமும் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடபங்குறிச்சி பகுதியில் இருந்து டிராக்டரில் கரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு டிராக்டர் சர்க்கரை ஆலைக்கு வந்து கொண்டிருந்தது. அய்யம்பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது டிராக்டர் என்ஜினின் பின்னால் டயர் திடீரென வெடித்தது. இதனால் கரும்புகளுடன் வந்த டிராக்டர் சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. இதனால் கரும்புகள் அனைத்து சாலையின் குறுக்கே கொட்டியது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கரும்புகள் அனைத்தையும் ஓரமாக எடுத்து வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்